ரஷ்யாவின் அணு அச்சுறுத்தல்..! ஐ.நா எடுத்த முடிவு
ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி முகவர் அமைப்பின் பிரதிநிதிகள் இருவர் நிரந்தமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளாதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் தென் பிராந்தியத்தில் ரஷ்ய படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் உற்பத்தி நிலையமான ஷப்போறிஸ்ஷியா அண்மைய நாட்களில் பேசுபொருளாக மாறியிருந்தது.
நேரடி விஜயம்
குறித்த அணுத் திட்டப் பகுதியில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அணுப் பேரழிவை ஏற்படுத்தும் என்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த பின்னணியில் ஐக்கிய நாடுகளின் அணுசக்தி முகவர் அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று அந்த அணுத் திட்டத்திற்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் அணுசக்தி முகவர் அமைப்பின் பிரதிநிதிகள் இருவர் அங்கு நிரந்தரமாக தங்கிருப்பார்கள் என வியன்னாவிலுள்ள சர்வதேச அமைப்புக்களுக்கான ரஷ்யாவின் பிரதிநிதி கூறியுள்ளார்.
எனினும் ஷப்போறிஸ்ஷியா அணு மின் உற்பத்தி நிலையத்திற்கான ஐ.நா அணுசக்தி முகவர் அமைப்பின் பயணத்தை ரஷ்யா சிறந்த முறையில் நோக்குவதாக நேர்மையானது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் அங்கு உக்ரைனால் தாக்குதல்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அதற்கு ஐ.நா பிரதிநிதிகளின் விஜயமே காரணம் எனவும் ஷப்போறிஸ்ஷியாவின் பிராந்திய நிர்வாக தலைவர் கூறியுள்ளார்.

