சொந்த நாட்டையே தாக்கிய ரஷ்ய இராணுவம்...!
United Russia
Ukraine
Russian Federation
By pavan
ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று தவறுதலாக சொந்த நகரிலேயே குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் போர் விமானம் Su-34 , உக்ரைனின் எல்லைப்புறத்தில் உள்ள பெல்கோரோட் நகரில் தவறுதலாக குண்டு வீசியுள்ளதாக பிராந்திய ஆளுநர் கிளாகோவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளதுடன் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.
தவறை ஒப்புக்கொண்ட ரஷ்ய இராணுவம்
இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்தி வருவதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்பினை தொடர்ந்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, தவறை ஒப்புக்கொண்ட ரஷ்ய இராணுவம், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி