உக்ரைனுக்கு ஆதரவாகும் அமெரிக்கா - வழங்கப்பட்ட பல மில்லியன் டொலர்கள்!
By pavan
உக்ரைனுக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான போர் ஒரு வருடம் கழிந்தும் தற்போது வலுப்பெற்றுக்கொண்டு செல்கிறது.
இந்த போரினால் இரு நாடுகளுக்கும் அதிக இழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் பல உதவிகளை செய்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.
300 மில்லியன் டொலர்

இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதில், ஏவுகணைகள், கூடுதல் ஹோவிட்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடங்குகின்றன.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கத் ஆரம்பத்தில் இருந்து இதுவரை அமெரிக்கா 2 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பு உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி