உக்ரைன் - ரஷ்ய யுத்தம் : பரிஸின் ஈஃபிள் கோபுரத்தில் நிகழவுள்ள மாற்றம்!
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
France
Paris
By Pakirathan
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், தொடர்ந்தும் போர் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், வியாழக்கிழமையுடன் ரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடையவுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் பல உக்ரைனுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில், பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் மின் விளக்கானது உக்ரைனின் கொடி நிறத்தில் ஒளிரவிடப்படவுள்ளது.
ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள்
குறித்த ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய உக்ரைனின் தேசியக் கொடி நிறத்தில் ஒளிரவுள்ளது.
இதனை பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கூறியுள்ளார்.
போர் ஆரம்பித்து ஒருவருடம் கழிந்தாலும் உக்ரேனிய மக்களுக்காக பரிஸின் அசைக்கமுடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என ஆன் இதால்கோ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி