தகர்க்கப்பட்டது சோவியத் ஒன்றியத்தின் நினைவுத் தூண்!
வடக்கு ஐரோப்பிய நாடான லாட்வியாவின் தலைநகர் கோபன்ஹேகனில் இருந்த சோவியத் ஒன்றிய நினைவுத் தூண் தகர்க்கப்பட்டது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான லாட்வியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
ரிகா நகரின் முக்கிய அம்சமாக இருந்த இந்த நினைவுத் தூண், 1985இல் ஜேர்மன் பாசிச படையெடுப்பாளர்களிடமிருந்து சோவியத் லாட்வியா மற்றும் ரிகாவின் விடுதலையாளர்களுக்காக கட்டப்பட்ட நினைவுச்சின்னம்.
உடைத்து குளத்தில் விழுத்தப்பட்ட நினைவு தூண்
இந்தத் தூண் கனரக இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்பட்டு அருகிலுள்ள குளத்தில் விழுந்ததில் மிகப் பெரிய நீரலை எழுந்துள்ளது.
இந்த தூண் 80-மீட்டர் கொங்கிரீட் ஸ்பைர் மேல் சிவப்பு நிற ஐந்து புள்ளிகள் கொண்ட நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்டது.
பார்க்கப்படையெடுத்த மக்கள்
இந்த தூண் தகர்க்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் இதனை நேரில் பார்வையிட்டதோடு, ஆரவாரம் செய்து கைதட்டினர்.
அத்துடன் இந்த காட்சி அந்நாட்டு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
?Būvnieki demontējuši pieminekļa kompleksa centrālo obelisku. pic.twitter.com/WzeSsFxHZz
— LTV Panorāma (@ltvpanorama) August 25, 2022

