உக்ரைனின் முக்கிய பகுதி ரஷ்யா வசமானது...
உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கார்கீவில் உள்ள எரிவாயு குழாய் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியதில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, “ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் 2ஆவது பெரிய நகரமான கார்கீவில் எரிவாயு குழாயை வெடிக்கச் செய்துள்ளனர்.
கடுமையான புகை மூட்டம் வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது. இது ஒரு சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தக் கூடும்.
இதனால் மக்கள் தங்கள் வீட்டு ஜன்னல்களை ஈரமான துணியால் மூடிவைக்க வேண்டும். அதிகளவில் திரவங்களை குடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 4ஆவது நாளாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் மும்முனை தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
இதனால், உக்ரைனில் 3 குழந்தைகள் உட்பட 198 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
