போரை முடிவுறுத்த ரஷ்யா பச்சைக்கொடி
Russia
Ukraine
war
live
end
updates
By Vanan
உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர தாம் விரும்புவதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அவசர கூட்டத்தில் ரஷ்ய பிரதிநிதி ஒருவர் இதனை கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்கும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும், நேட்டோ அமைப்பில் சேர்வதன் மூலம் ரஷ்யாவின் நலனுக்கு எதிராக செயற்பட்டதால் போர் மூண்டது என்றும் குறித்த பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போருக்கு காரணம் இவ்வாறான செயற்பாடுகளே என வெளிப்படையாக கூறியுள்ளார்.
உக்ரைனும், ஜோர்ஜியாவும் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தன.
ரஷ்யாவின் நலனை காக்கவே உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டதாக ரஷ்ய தரப்பு கூறியுள்ளது.
