ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்குவதாக தகவல்
உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தை மையப்படுத்தி, படை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ள ரஷ்யா, கீயேவ் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த அனைத்துப் படையினரையும் மீளப் பெற்றுள்ளனர்.
எனினும் எதிர்காலத்தில் கீயேவ் நோக்கிய படையெடுப்பை ரஷ்யா மேற்கொள்ளக் கூடும் என பெயர் குறிப்பிடாத பெண்டகனின் மூத்த அதிகாரியொவர் கூறியுள்ளார்.
பின்வாங்கும் துருப்புக்கள் மீண்டும் கீயேவ் பிராந்தியம் நோக்கி செல்லுமா என்பது தெளிவாக தெரியவரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீயேவ் பிராந்தியத்தில் இருந்து பின்வாங்கும் துருப்புக்கள் சில காலத்திற்கு போர் திறனை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என யுத்தம் தொடர்பான ஆய்வு நிறுவகமொன்று கூறியுள்ளது.
உக்ரைனுக்கு அனுப்பட்ட 130 பட்டாலியன் துருப்புக்களில் 80 இற்கும் மேற்பட்டவை தொடர்ந்தும் நாட்டிற்குள் இருப்பதாக பெண்டகனின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கியேவ் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள சுமார் 24 ஆயிரம் ரஷ்ய படையினர் மீளப் பெறப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி அசோசியேட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது
