ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற ரஷ்ய படை? உக்ரைன் அதிபர் ஆதங்கம்
உக்ரைன் - மரியுபோல் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை ரஷ்யா மறைக்க முயற்சிக்கிறது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்ய படை ஆக்கிரமித்துள்ள மரியுபோல் நகருக்கான மனிதாபிமான உதவிகளை தடுத்து வருவதால், அவர் இவ்வாறு சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
புச்சாவில் ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபட்டது என உக்ரைன் குற்றம் சாட்டியது. இதற்காக ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இனப்படுகொலை குற்றச்சாட்டை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்தநிலையில் புச்சாவில் நடந்தது போல் மரியுபோல் நகரிலும் ரஷ்யா இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளன. அங்குதான் அதிகமாக பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
கிட்டத்தட்ட அழிந்து போன இடமாக மரியுபோல் மாறி இருக்கிறது.
மனிதாபிமான உதவிகளுடன் நாம் மரியுபோலுக்குள் நுழைய முடியாததற்கு காரணம் ரஷ்யர்கள் பயப்படுவதால் தான். நாங்கள் அங்கு னெ்றால், என்ன நடக்கிறது என்பதை உலகம் பார்த்து விடும் என அவர் கூறியுள்ளார்.
