ரஷ்யாவில் தனது சேவைகளை அதிரடியாக நிறுத்தியது மற்றுமொரு நிறுவனம்!
russia
ukraine
war
amazon
By Thavathevan
ரஷ்யாவில் அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைப்பதாக அமேசொன் நிறுவனமும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 15 ஆவது நாளுக்கு மேலாக கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களினால் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்து உள்ளனர்.
ரஷ்ய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல்களை தீவிரமாக நடத்தி வருகிறது. அதற்கு உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகின்றது.
இந்நிலையில் ரஷ்யாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
அதன்படி ரஷ்யாவில் தங்களது அனைத்து வணிகங்களையும் நிறுத்தி வைப்பதாக அமேசொன் நிறுவனமும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி