உக்ரைனை திணறடிக்கும் ரஷ்ய துருப்புகள்! சரமாரியாக குண்டு மழை
பாம்பு தீவு மீது தாக்குதல்
உக்ரைன் - பாம்பு தீவு மீது இன்று ரஷ்யா போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் 5 ஆவது மாதத்தை நெருங்கியுள்ளது. தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷ்ய படைகள் கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் கருங்கடல் பகுதியில் உக்ரைனின் பாம்பு தீவை ரஷ்ய படைகள் சமீபத்தில் கைப்பற்றியது. அந்தத் தீவை மீட்க உக்ரைன் இராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார்கள்.
இதையடுத்து பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியது. இந்த நிலையில் பாம்பு தீவு மீது இன்று ரஷ்யா போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியுள்ளது.
ரஷ்யா போர் விமானங்கள் குண்டுகளை வீச்சு
சுகோய் - 30 ரக போர் விமானம் மூலம் பாம்பு தீவு மீது பொஸ்பரஸ் ரக குண்டுகள் வீசப்பட்டன.
பாம்பு தீவில் இருந்து ரஷ்ய படைகள் விலகினாலும், அங்குள்ள அதிநவீன இராணுவ தளபாடங்களை ரஷ்யாவால் திரும்பக்கொண்டு செல்ல முடியவில்லை.
எனவே இராணுவ தளபாடங்களை அழிக்க ரஷ்யா தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.