உக்ரைனில் அமெரிக்கா தீட்டும் திட்டம்
உக்ரைனில் ஏற்பட்ட இழப்புக்கள் மூலம் ரஷ்யாவின் தலைமைத்துவம் மீண்டும் இவ்வாறான யுத்தமொன்றுக்கு செல்லாது என நம்புவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொய்ட் ஒஸ்ரின் தெரிவித்துள்ளார்.
சரியான ஆதரவை வழங்கினால் ரஷ்யாவிற்கு எதிரான யுத்ததில் உக்ரைனால் வெற்றிபெற முடியும் எனக் குறிப்பிட்ட லொய்ட் ஒஸ்ரின், உக்ரைன் இராணுவத்தின் முயற்சிகளையும் பாராட்டியுள்ளார்.
உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்ரின் ஆகியோரை உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
உக்ரைன் அரசாங்கத்திற்கு அமெரிக்காவின் பலமான ஆதரவை வெளிப்படுத்தும் முகமாக தமது இந்த விஜயம் அமைந்துள்ளதாக அன்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜோ பைடனின் தலைமைத்துவம் மற்றும் தமது நாட்டிற்கு வழங்கிவரும் ஆதரவு தொடர்பில் உக்ரைன் அதிபர் வெலெடிமீர் ஷெலென்ஸ்கி பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபருடனான சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்ரின், உக்ரைன் மீதான படையெடுப்பு விடயத்தில் செய்ததை போன்று மீண்டும் செய்யாத அளவிற்கு ரஷ்யாவை பலமிழப்பதை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.
