ரஷ்யாவின் 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்..!
United Russia
Russo-Ukrainian War
By Kiruththikan
ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அது வீழ்த்தப்பட்டதாகவும் ரஷ்யா அரசாங்கம் தெரிவித்தது.
அத்துடன், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் எனவும், இந்த புட்டினை கொலை செய்யும் முயற்சி என்றும் குற்றஞ்சாட்டியது. மேலும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்த குற்றஞ்சாட்டை உக்ரைன் நிராகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு உக்ரைன் மீது ரஷ்யா 24 ட்ரோன்களை அனுப்ப தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
கீவ் மீது தாக்குதல்
மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் இராணுவ நிர்வாக தலைவர் செர்ஜி பாப்கோ தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி