ஐ.எம்.எப் பின்னால் சென்றதால் உக்ரைனுக்கு ஏற்பட்ட நிலை - முன்னாள் அமைச்சர் விளக்கம்
srilanka
ukraine
Vasudeva Nanayakkara
imf
By Sumithiran
சர்வதேச நாணய நிதியத்திடம் அரசாங்கம் சென்றால் மக்கள் பட்டினியுடன்தான் வீட்டுக்கு செல்ல நேரிடும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கு பின்னால் சென்றதன் காரணமாகவே இன்று உக்ரைனில் யுத்தம் இடம்பெற்றுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்திற்கு பின்னால் நேட்டோவும் நாட்டிற்குள் நுழைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எரிபொருள் பாவனையை உடனடியாக குறைக்க கூப்பன் முறை எரிபொருள் வழங்க வேண்டும் எனவும் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி