ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 20 பேர் பலி
ரஷ்ய ஏவுகணைகள் தாக்குதல்
ரஷ்ய ஏவுகணைகள் உக்ரைனின் மத்திய நகரமான வின்னிட்சியாவைத் தாக்கியதில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் கீவின் தென்மேற்கில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் மேலும் தொண்ணூறு பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
மூன்று ரஷ்ய ஏவுகணைகள் அலுவலகத் தொகுதியையும் குடியிருப்பு கட்டடங்களையும் சேதப்படுத்தியுள்ளன.
பயங்கரவாதத்தின் வெளிப்படையான செயல்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி இதை 'பயங்கரவாதத்தின் வெளிப்படையான செயல்' என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
சுமார் 3,70000 மக்கள்தொகை கொண்ட வின்னிட்சியாவின் மையத்தில் உள்ள குடியிருப்பு கட்டடங்களே தாக்கப்பட்டன.
எனினும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தாக்குதல் குறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் கலிப்ர் கப்பல்
ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
