உக்ரைனுக்கு கிடைக்கும் அமெரிக்காவின் மற்றுமொரு உதவி!
உக்ரைன் - ரஷ்ய யுத்தமானது ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்தநிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு மேலதிக இராணுவ உதவியாக 2.6 பில்லியன் டொலர் வழங்க உறுதியளித்துள்ளது.
ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக ஆயுதங்களை வாங்க அனுமதிக்கும் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
ஆயுத கொள்வனவு
அமெரிக்காவின் கையிருப்பிலிருந்து ஆயுதங்களை நேரடியாகப் பெறுவதற்குப் பதிலாக இவ்வாறான திட்டத்தின் மூலம் உக்ரைன் தேவையான ஆயுதங்களைக் பெற முடியும் என கூறப்படுகிறது.
தொலைதூரம் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு இந்த நிதியை பயன்படுத்த முடியும் என சொல்லப்படுகின்றது.
குறிப்பாக, நீண்ட தூரம் சென்று துல்லியமாக இலக்கைத் தாக்கக்கூடிய ஆயுதங்களே தற்போது உக்ரைனுக்கு அதிகம் தேவைப்படுவதாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா
இதேவேளை, இதுவரை உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவியாகச் சுமார் 35 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அதிபர் பைடன் கூறியுள்ளார்.
அதிகளவான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதுடன், அதற்கு அடுத்ததாக பிரிட்டனும், ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளன.