ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை உக்ரைன் நிச்சயம் மீட்டெடுக்கும் - அதிபர் ஜெலன்ஸ்கி!
உக்ரைன் - ரஷ்ய போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றிபெறும் எனவும், ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றிய எமது நிலங்களை நிச்சயம் மீட்பேன் எனவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கி 400 நாட்கள் நெருங்கியுள்ள நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதனைத் கூறியுள்ளார்.
உக்ரைன் அதிபர் உரை
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
நாங்கள் ஒரு பெரிய தடைகளை கடந்து நடந்து வந்துள்ளோம்.
உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும் வீரர்கள் நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்தார்கள் மற்றும் பாதுகாத்து வருகின்றனர்.
உதவி செய்துள்ள மற்றும் தொடர்ந்து எமக்கு பாதுகாப்பு இராணுவ தளபாடங்களை வழங்கி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், அதற்கு உதவியவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
உக்ரைனின் முயற்சிகள்
உக்ரைன் பயங்கரமான நாட்களைக் கடந்து வந்துள்ளதுடன், இந்த காலத்திலும் நாங்கள் தப்பி வந்துள்ளோம்.
இந்த வார்த்தைகளுக்கு பின்னால் உக்ரைனின் பெரிய முயற்சிகள் உள்ளன.
கீவ், செர்னிஹிவ் மற்றும் சுமி பகுதிகள், கார்கிவ் பகுதிக்கள், கெர்சன் நகர் எமக்கு திரும்பி விட்டது, பாக்முத் மற்றும் தொன்பாஸ் நிலங்களை பாதுகாக்கிறோம், இது உக்ரைனியர்களின் வீரத்தை பிரதிபலிக்கிறது.
