இந்தியாவில் நான்கு தசாப்தங்களின் பின் கலைக்கப்பட்ட பிரிவினைவாத அமைப்பு

India
By Sathangani Jan 25, 2024 07:41 AM GMT
Report

இந்தியாவின் அசாமை தளமாக கொண்ட ஆயுதம் ஏந்திய பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா உருவான 44 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று (24)  முறைப்படி கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைப்பினர் தங்கள் ஆயுதங்களை இம்மாதம் அரசிடம் ஒப்படைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

இறையாண்மை கொண்ட அசாமை உருவாக்கும் நோக்குடன் உல்ஃபா (அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி) அமைப்பு கடந்த 1979ஆம் ஆண்டு வடக்கு அசாமின் சிவசாகரில் உருவானது.

தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் : முன்மொழியப்பட்டது பெயர்

தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் : முன்மொழியப்பட்டது பெயர்

மத்திய அரசு தடை

ஆயுதம் ஏந்திய இந்த பிரிவினைவாத அமைப்பு தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த 1990இல் இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்தியாவில் நான்கு தசாப்தங்களின் பின் கலைக்கப்பட்ட பிரிவினைவாத அமைப்பு | Ulfa Disbanded Separatist Organization 44 Years

இதையடுத்து உல்ஃபா அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் இடையே கடந்த 12 ஆண்டுகளாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததன் பலனாக அசாம் மற்றும் மத்திய அரசுடன் இந்த அமைப்பு கடந்த டிசம்பர் 29ஆம் திகதி முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

வன்முறையை கைவிடவும் தேசிய நீரோட்டத்தில் இணையவும் அந்த அமைப்பு ஒப்புக்கொண்ட நிலையில் இந்த அமைப்பின் கடைசி பொதுக்குழு கூட்டம் சிபாஜர் நகரில் நேற்று முன்தினம் (23) நடைபெற்றது.

நுவரெலியாவில் பனிப்பொழிவு! படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

நுவரெலியாவில் பனிப்பொழிவு! படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

உல்ஃபா அமைப்பு

இதில் முத்தரப்பு அமைதி ஒப்பந்தம் அடிப்படையில் உல்ஃபா அமைப்பை கலைப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து உல்ஃபா பொதுச் செயலாளர் அனுப் சேத்தியா  கூறும்போது

இந்தியாவில் நான்கு தசாப்தங்களின் பின் கலைக்கப்பட்ட பிரிவினைவாத அமைப்பு | Ulfa Disbanded Separatist Organization 44 Years

“எங்கள் அமைப்பின் 9 முகாம்களை சேர்ந்த 900 உறுப்பினர்களின் கூட்டம் மத்திய அசாமின் மங்கல்டோய் முகாமில் நடைபெற்றது. இதில்அமைப்பை கலைக்கும் முடிவு அங்கீகரிக்கப்பட்டது.

முகாம்கள் இருந்த நிலத்தை விவசாயத்துக்காக எங்கள் உறுப்பினர்களுக்கு அசாம் அரசு வழங்க வேண்டும். முகாம்களில் உள்ள ஆயுதங்கள் இம்மாதம் நடைபெறும் விழாவில் அரசிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும்.

சனத் நிஷாந்த உயிரிழப்பு : ராகம வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள்

சனத் நிஷாந்த உயிரிழப்பு : ராகம வைத்தியசாலையில் குவிந்த அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள்

அரசுடன் பேச்சுவார்த்தை 

அசாம் விகாஷ் மன்ச்சா என்ற புதிய சமூக அமைப்பு உருவாக்கப்படும். விருப்பமுள்ள எங்கள் உறுப்பினர்கள் இதில் சேரலாம். வளர்ச்சித் திட்டங்களின் பலன்களை பெறவும் தன்னிறைவு அடையவும் பொதுவான தளமாக இது இருக்கும்” என்றார்.

இந்தியாவில் நான்கு தசாப்தங்களின் பின் கலைக்கப்பட்ட பிரிவினைவாத அமைப்பு | Ulfa Disbanded Separatist Organization 44 Years

2011 பெப்ரவரியில் உல்ஃபா இரண்டு குழுக்களாக பிரிந்தது. அரபிந்த ராஜ்கோவா தலைமையிலான குழு வன்முறையை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.

பரேஷ் பரூவா தலைமையிலான குழு பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ‘உல்ஃபா இன்டிபென்டன்ட்’ என்ற பெயரில் செயற்பட முடிவு செய்தது. மியான்மர் மற்றும் வடகிழக்கின் சில பகுதிகளில் முகாமிட்டுள்ள இக்குழுவில் 200 உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

விசா விவகாரத்தில் கட்டுப்பாடு விதித்த கனடா! இந்திய மாணவர்களுக்கு பேரிடி

விசா விவகாரத்தில் கட்டுப்பாடு விதித்த கனடா! இந்திய மாணவர்களுக்கு பேரிடி



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026