ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையில் விசேட சந்திப்பு..!
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் அலுவல்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகளின் செயற்பாட்டுத் திணைக்களத்தின் ஆசியா மற்றும் பசுபிக் விவகாரப் பிரிவின் பணிப்பாளர் பீட்டர் டியூ,சிரேஷ்ட அரசியல் விவகார அதிகாரியும்,தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய,ஆசிய மற்றும் பசுபிக் விவகாரப் பிரிவின் குழுத் தலைவர் அல்மா சாலியு,
இலங்கைக்கான ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், இலங்கையிலுள்ள ஐ.நா.அலுவலகத்தின் சமாதானம் மற்றும் அபிவிருத்தி விவகார ஆலோசகர் எட்வர்ட் ரீஸ்,அலுவலகத்தின் தேசிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி ஆய்வாளர் ஜெனின் பெர்னாண்டோ, அலுவலக ஐ.நா. நிதியத்தின் (UNSLSDG) சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஒருங்கிணைப்பாளர் தாரக ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பிரதிநிதிகளே இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்தனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)