அனைத்தையும் இழக்க நேரிடும் : ட்ரம்பிற்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
ஏனைய நாடுகள் மீது வரி விதிக்கும் முடிவால் பாதிப்பு தான் ஏற்படும்' என்று ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்(Antonio Guterres), அமெரிக்காவுக்கு(us) மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக பொறுப்பேற்றது முதல் ட்ரம்ப்(donald trump), பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, சட்டவிரோத குடியேறிகளை தடுக்கத் தவறியதற்காகவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தாதற்கும், மெக்சிகோ, கனடா மீது தலா 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரியையும் விதித்தார்.
நடைமுறைக்கு வந்த வரி விதிப்பு
இதற்கு பதிலடியாக, அமெரிக்கா மீது 25 சதவீத வரிகளை கனடா விதித்தது. அதேபோல, உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பும் நேற்று(12) முதல் நடைமுறைக்கு வந்தது.
ஜனாதிபதி ட்ரம்ப்பின் இந்த முடிவால், அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக கனடாவும்(canada), மெக்ஸிகோவும்(mexico) உள்ளன. காரணம், அமெரிக்க இரும்பு இறக்குமதியில் கனடா 79 சதவீதமும், அமெரிக்க அலுமினிய இறக்குமதியில் மெக்சிகோவும் தான் அதிக பங்கு வகிக்கின்றன.
ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை
இந்த நிலையில், உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை தொடுத்தால், அனைத்தையும் இழக்க நேரிடும் என்று ஐ.நா., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; நாம் உலகளாவிய பொருளாதாரத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று நினைக்கிறேன். ஏனெனில் ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது.
வரி இல்லாத வர்த்தகத்தின் மூலம், அனைத்து நாடுகளும் பயனடைய முடியும். வரிகளை சுமத்தி வர்த்தகப் போரில் ஈடுபட்டால், அனைத்தையும் இழக்க நேரிடும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்