எரிபொருள் விலை நிலவரம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Price In World Nalinda Jayatissa
By Sathangani Jul 16, 2026 03:47 AM GMT
Report

இலங்கையில் தடையின்றி எரிபொருளை விநியோகிக்க முயற்சிப்பதால் உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படக்கூடிய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சவால்களை எதிர்கொள்வதில், கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கம் மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகிறது.

சிஐடி வளையத்தில் சலே...! மாயமான குடும்பத்தின் குரல் - அரங்கேறும் மர்மங்கள்

சிஐடி வளையத்தில் சலே...! மாயமான குடும்பத்தின் குரல் - அரங்கேறும் மர்மங்கள்

மத்திய கிழக்கு சூழ்நிலை 

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சீராகி வரும் போதிலும், ஏதேனும் ஒரு துறையை முடக்கிவிட்டு எம்மால் முன்னோக்கி நகர முடியாது. அவ்வாறு முடக்கினால் அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.

எரிபொருள் விலை நிலவரம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Unable To Purchase Fuel World Market Lowest Price

எனவே, எரிபொருள், மின்சாரம் மற்றும் உரம் ஆகிய அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றித் தொடர்ந்து வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காகும்.

தற்போது டீசல் நுகர்வு 11 வீதத்தாலும், பெட்ரோல் நுகர்வு 9 வீதத்தாலும் குறைந்துள்ள போதிலும், மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எரிபொருள் ஒதுக்கீட்டு முறையைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டியுள்ளது.

யாழின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டங்கள்! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

யாழின் மூன்று தீவுகளில் எரிசக்தி திட்டங்கள்! அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

மசகு எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கங்களுக்கு அமைவாகவே உள்நாட்டு எரிபொருள் விலைகள் தீர்மானிக்கப்படும்.

எரிபொருள் விலை நிலவரம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | Unable To Purchase Fuel World Market Lowest Price

சர்வதேச ரீதியில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கைகள் குறித்துப் பேசப்பட்டாலும், எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.

இதனால், நாட்டில் எவ்விதத் தடையுமின்றித் தொடர்ந்து எரிபொருளை விநியோகிப்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிப்பதால், உலக சந்தையில் நிலவும் மிகக் குறைந்த விலைக்கு எம்மால் எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாமல் போகலாம்“ என தெரிவித்தார். 

ஆசிரியரின் காரிற்கு சிறுவன் தீ வைத்ததாக பரவும் தகவல்...! காவல்துறையின் அறிவிப்பு

ஆசிரியரின் காரிற்கு சிறுவன் தீ வைத்ததாக பரவும் தகவல்...! காவல்துறையின் அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016