இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் - ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
வத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கெரவலபிட்டிய பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (25) மாலை இரு குழுக்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி, கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவர் தாக்கப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணை

மட்டக்குளியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே காயமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வத்தளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி