நிம்மதியடையப்போகும் இலங்கை மக்கள் : அமைச்சரின் உறுதிமொழி
Ministry Of Public Security
Ananda Wijepala
By Sumithiran
பாதாள குழுக்களை வெகுவிரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். .
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களின் பிரதான நபர்களாக செயற்பட்ட கெஹல்பத்தரே பத்ம, கமாண்டர் சலிது உட்பட குற்றவாளிகள் ஐந்து பேரை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.
அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் செயற்படும் பாதாள குழு
தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பாதுகாப்பு தரப்பினர் எவ்விதமான அரசியல் தலையீடுமில்லாமல் செயற்பட்டதன் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
அரசியல்வாதிகளின் ஆசிர்வாதத்துடன் தான் பாதாள குழுவினர் செயற்பட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி