துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பஸ்பொட்டா..! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பாதாள உலகக்குழுவின் தலைவர்களில் ஒருவரான பஸ்பொட்டா எனப்படும் சமன் ரோஹித உயிரிழந்துள்ளார்.
கம்பஹா நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் நேற்று இடம் பெற்ற துப்பாகி சூட்டில் காயமடைந்த பஸ்பொட்டா வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, பஸ்பொட்டா உட்பட 04 பேர் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு நேற்று பிற்பகல் வந்திருந்தனர்.
மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் தப்பி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
மேலதிக விசாரணை
இந்த சம்பவத்தில் காயமுற்றவர்கள் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு பஸ்பொட்டா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 18 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்