யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்
Jaffna
Sri Lanka
Sri Lankan Peoples
By Raghav
வேலை வாய்ப்பினை வழங்குமாறு கோரி வேலையில்லா பட்டதாரிகளினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் (14.02.2025) யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
ஒருங்கிணைப்பு குழு
2025ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த கூட்டத்திற்கு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பட்டதாரிகள் கடந்த சில வாரங்களாகவும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள் : பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி