ராஜ் ராஜரட்ணத்தின் 'சமனற்ற நீதி' நூல் வெளியீட்டு விழா!
ராஜ் ராஜரட்ணத்தின் 'சமனற்ற நீதி' என்னும் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா நாளை யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வானது நாளை (20.01.2024) யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் பிற்பகல் 2.45 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிகழ்வில் நூல் பற்றிய அறிமுக உரையை வைத்திய கலாநிதி ம. குருபரன் நிகழ்த்தவுள்ளார். இதன்பின்னர் நூல் வெளியீடும் சிறப்புப் பிரதி வழங்குதல் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
அத்துடன் சட்டத்துறை விரிவுரையாளர் கோசலை மதன், சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஆகியோர் நூல் பற்றிய சிறப்புரைகளை வழங்கவுள்ளனர்.
நூலாசிரியர் ராஜ் ராஜரட்ணம்
'சமனற்ற நீதி' நூலின் நூலாசிரியர் ராஜ் ராஜரட்ணம் பற்றி நோக்குகையில்
1957 இல் இலங்கையில் பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை இலங்கையிலும் இந்தியாவிலும் கற்றார்.
உயர் கல்வியை இங்கிலாந்திலும் கற்று சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டதாரியானார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
சேஸ் மேன்ஹாட்டன் வங்கியில் நிதிப்பகுப்பாய்வாளராக தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இவர் 1997 இல் 'கலியன்' முதலீட்டு நிறுவனத்தை நிறுவினார்.
அமெரிக்க நீதித்துறையும் அமெரிக்க புலனாய்வுப் பணியகமும் செய்த கூட்டுச் சதியால் 2009 இல் ராஜ் ராஜரட்ணம் கைது செய்யப்பட்டார்.
இந்த நூலில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் அமெரிக்காவில் நிலவும் சமனற்ற நீதி குறித்து ராஜ் ராஜரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூல் வெளியீட்டு விழாவினை ஐபிசி தமிழ் தொலைக்காட்சி மற்றும் ஐபிசி தமிழ் வலையொளித்தளத்தின் ஊடாகவும் நேரலையில் காண முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |