இஸ்ரேல் - காசா : போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றம்
                                    
                    United Human Rights
                
                                                
                    Israel-Hamas War
                
                        
        
            
                
                By Beulah
            
            
                
                
            
        
    ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது, மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், காசாவிற்கு உதவிகளை அணுகக் கோரிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்களிப்பு
இத்தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில், 45 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தீர்மானத்திற்கு எதிராக இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்திருந்த நிலையில், அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் தீவிரவாத தாக்குதலுக்கு வெளிப்படையான கண்டனத்தை தெரிவித்திருந்த கனடா இதில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்