பூக்கடை உரிமையாளர் மீது இனந்தெரியாத கும்பல் தாக்குதல்
Ampara
Sri Lanka Police Investigation
Crime
By Dharu
அம்பாறை பகுதியில் உள்ள பூக்கடை ஒன்றின் உரிமையாளர் மற்றும் அவர் மகன் மீது இன்று (10) அதிகாலை இனந்தெரியாத கும்பல் சேர்ந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த பூக்கடையின் உரிமையாளரும் அவரது மகனும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலால் பூக்கடை உரிமையாளரின் மகனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை விசாரணை
“புரு பொடி” என்ற நபருடன் வந்த குழுவினரே இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை அம்பாறை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்