ஐக்கிய அரபு அமீரகத்தில் ட்ரோன்களை பயன்படுத்த தடை
Yemen
Attack
United Arab Emirates
Ban
Drones
Houthi rebels
By MKkamshan
ஐக்கிய அரபு அமீரகத்தில் ட்ரோன்களை பயன்படுத்த ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் சம்பவத்தின் எதிரெலியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ட்ரோன் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் ட்ரோன்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இலகு ரக விளையாட்டு விமானங்களையும் பயன்படுத்த அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இந்த காலக்கட்டத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஆளாவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
