ட்ரம்பின் தேர்தல் நகர்வுக்கு மத்தியில் அமெரிக்க - இஸ்ரேல் உறவில் விரிசல்
ஈரான் விவகாரம் குறித்த ட்ரம்பின் கருத்து சர்வதேசத்தில் பெரும் அதிர்வலைகளை தூண்டியுள்ள நிலையில் அமெரிக்க-இஸ்ரேல் உறவில் விரிசல்கள் தோன்றியுள்ளதாக சர்வதேச வல்லுனர்கள் விவரித்துள்ளனர்.
இஸ்ரேலிய இராணுவம் கட்டாருக்குள் இருந்த இலக்குகளைத் தாக்கிய விவகரத்தில் இரு நாடுகளுக்கும் இவ்வாறு விரிசல் உறுவாகியுள்ளதாக மத்திய கிழக்கு ஊடக செய்திகளில் விவரிக்கப்படுகிறது.
ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்க இரு நாடுகளும் முடிவு செய்தபோது, அமெரிக்க அரசாங்கம் இஸ்ரேலை ஆதரித்து.
ட்ரம்ப் வெளியுறவுக் கொள்கை
எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியுறவுக் கொள்கையைச் செயல்படுத்தும்போது அதிகளவில் தனிப்பட்ட அரசியல் செய்வதாக கூறப்படுகிறது.

மேலும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான விமர்சனங்களையும் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் கட்டாருக்குள் இருந்த இலக்குகளைத் தாக்கிய விவகாரம் அமெரிக்க தரப்பை மிகவும் கோபப்படுத்தியது.
அவர், அமெரிக்கா ஒரு மதிப்புமிக்க சகாவாக கருதும் ஒரு நாட்டின் மீதான தாக்குதலுக்காக, கட்டார் மன்னரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்குமாறு பிரதமரைக் கட்டாயப்படுத்தினார் .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |