தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் - பாதிக்கப்படும் கல்வி நடவடிக்கைகள்!
Government Of Sri Lanka
Strike Sri Lanka
By Pakirathan
அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்தும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நேற்றைய தினமும் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் சீராக இயங்கவில்லை.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடு செய்வதிலும் பங்கேற்பதைத் தவிர்ப்பதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்விளைவாக, உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது மேலும் 22 நாட்கள் தாமதமாகும் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்