களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரும் பிரதிநிதியும் கைது!
களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரும் மற்றுமொரு பிரதிநிதியும் தலங்கம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலங்கம காவல்நிலையத்திற்கு வருகைதந்த பின்னர் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் சங்கத்தின் பிரதிநிதி டில்ஷான் ஹர்ஷன ஆகியோரே இவ்வாறு கைதானவர்களாவர்.
நீதிமன்றத்தில் முன்னிலை

கடந்த ஜூலை 10ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, கல்வி அமைச்சின் வாயிலை சேதப்படுத்தியமைக்காக மேற்படி இருவர் மீதும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.
இருவரது வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், நாளை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.