பாரிய மோசடி குறித்து பொது மக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை!
காவல்துறை உத்தியோகத்தர்கள் எனக் கூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரகசிய காவல் உத்தியோகத்தர்களை போன்று விசேட காவல் உத்தியோகத்தர்களும் சிவில் உடை அணிந்து இவ்வாறான கடமைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டால் எந்தவொரு சாரதியும் அடையாள அட்டையை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியாட்கள் சிலர் காவல்துறையினரின் பெயரில் இலஞ்சம் பெறுதல் அல்லது வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பொருட்களை திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபட முடியும் என்பதால் காவல்துறை ஊடகப் பேச்சாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |