ஈரானுடனான போர் நிறுத்தத்திற்கு கால அவகாசம் இல்லை : ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீடிப்பது குறித்து "கால அவகாசம் எதுவும் இல்லை" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொகுப்பாளர் மார்த்தா மெக்கல்லமிடம் கூறியதாக Fox news செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், மோதலை முடிவுக்குக் கொண்டுவர தனக்கு "அவசரம் இல்லை" என்றும், ஒரு "நல்ல ஒப்பந்தத்தை" விரும்புவதாகவும் தொலைபேசி அழைப்பில் ட்ரம்ப் மெக்கல்லமிடம் புதன்கிழமை அன்று கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட்டும் புதன்கிழமை அன்று, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஈரானியர்கள் தங்கள் வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி ட்ரம்ப் தனது சிவப்புக் கோடுகளை மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ளார் என்று தெரிவித்தார்.
ஈரானிய ஆட்சி
அத்துடன் ஈரானிய ஆட்சியிடமிருந்து பதிலுக்காக வோஷிங்டன் காத்திருக்கிறது என்றும், அவர்களால் இன்னும் ஒருமித்த செய்தியை அனுப்ப முடியவில்லை, அதனால்தான் ட்ரம்ப் போர் நிறுத்தத்தை நீடிக்க முடிவு செய்தார் என லீவிட் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ஈரானுடன் சமீபத்தில் நீடிக்கப்பட்ட போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் என அமெரிக்கா இஸ்ரேலிடம் கூறியதாக இஸ்ரேலிய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |