சதொசவிற்கு சொந்தமான பூடு விற்பனை : வியாபாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு
Garlic
Sri Lanka Magistrate Court
Lanka Sathosa
Businessman
By Sumithiran
லங்கா சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான 54,860 கிலோகிராம் வெள்ளைப்பூண்டை சட்டவிரோதமாக தனியார் வணிக நிறுவனத்திற்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு வணிகர்களை விடுவிக்க வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலாயுதன் சிறீதரன் மற்றும் சின்னதம்பி கமலா குமார் என்கிற குமார ஆகிய இரு தொழிலதிபர்களும், அவர்களுக்கு எதிராக மேலும் சட்ட நடவடிக்கைகளைத் தொடரப் போவதில்லை என்று சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து, வழக்கில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் துறையால் கைது
சந்தேக நபர்கள் முன்னர் குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் நீக்கியது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்