பதுளையில் பெயரிடப்படாத வீதிகள்: எடுக்கப்பட்ட நடவடிக்கை
பதுளை மாவட்டத்தில் உள்ள பெயர் சூட்டப்படாத அனைத்து வீதிகள் மற்றும் வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த செய்தியை பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மேஜர் சுதர்சன தெனிபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இந்த செயற்திட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள் இணைந்து நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முறைப்பாடுகள்
மேலும், சரியான முகவரி இல்லாத காரணத்தால் நேர்முகத்தேர்வு, நியமனக் கடிதம் போன்ற ஆவணங்கள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளான பலர் தம்மிடம் முறைப்பாடுகள் செய்ததாக மேஜர் சுதர்சன தெரிவித்துள்ளார்.

அதேவளை, பதுளை பிராந்திய தபால் அத்தியட்சகர் ஏ.ஜி. சமன் மஹிந்த, ஒரே பெயரில் பலர் உள்ளனர், வீட்டு இலக்கம் இல்லை, முகவரி உள்ளவர்கள் கூட முழு முகவரியை சரியாக பதிவு செய்யாததால், அவர்களுக்கு கடிதங்கள் மற்றும் பார்சல்களை வழங்குவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுளள்தாக குறிப்பிட்டுள்ளார்.
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்