சர்ச்சையை கிளப்பிய யூடியூபர்: சிஐடியில் முறைப்பாடளித்த ரணில் தரப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என முன்கூட்டியே தெரிவித்த தென்னிலங்கை யூடியூபருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணை்ககளத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுதத்த திலகசிறி என்ற யூடியூபருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி விசாரணை நடத்துமாறு சிஐடியில் இன்று முறைப்பாடளித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று சுதத்த திலகசிறி நேற்று தனது யூடியூப் சனலில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
விசாரணை நடத்தக் கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி வாக்மூலம் வழங்குவதற்கு முன்பே காவலில் வைக்கப்படுவார் என்று அறிக்கை வெளியிட்டது குறித்து விசாரணை நடத்தக் கோரி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குழு இன்று சிஐடியில் கேட்டுக் கொண்டுள்ளது.
அத்தோடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்து ஒரு யூடியூப் சேனல் செய்தியாளர் கணித்தது தற்செயலாக நடக்க முடியாது என்றும் அது திட்டமிடப்பட்டது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 4 நாட்கள் முன்
