ஐக்கிய தேசியக் கட்சி எம்முடன் இணைவதே மேல் - ரஞ்சித் மத்தும பண்டார
Politics
UNP
Sri lanka
Ranjith Madduma Bandara
By Thavathevan
ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் எம்முடன் இணைவதே மேலானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"ஐக்கிய தேசியக் கட்சி என்பது எமது தாய்க்கட்சி. அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் எம்முடன்தான் இருக்கின்றனர்.
அந்தக் கட்சியை நாம் மறக்கமாட்டோம். ஆனால், அந்தக் கட்சியின் அரசியல் கட்டமைப்பில் தற்போது ஒருவர்தான் இருக்கின்றார்.
ஆகவே, அந்தக் கட்சியால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எம்மால்தான் அது முடியும். எனவே, எம்முடன் கூட்டணி அமைப்பதுதான் ஆரோக்கியமான விடயமாக அமையும்" என தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி