அநுரவின் கருத்துக்கு கேள்வியெழுப்பிய ரணில் தரப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்ட கருத்து தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டு கேள்வியெழுப்பியுள்ளது.
அதன்படி, கடந்த 13 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற 36 ஆவது கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வின் போது “வடிகாலில் ஊர்ந்து வந்து கிரீடம் எங்கள் தலையில் விழவில்லை” என ஜனாதிபதி கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.3
இந்த கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
“கிரீடம் அணிந்த” ஆட்சி
1972 குடியரசு அரசியலமைப்பின் மூலம் இரத்து செய்யப்பட்ட “கிரீடம் அணிந்த” ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்துவதை ஜனாதிபதியின் இந்தக் கருத்து நினைவூட்டுவதாக ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஜனாதிபதியின் இந்தக் கருத்து ”36 ஆவது கார்த்திகை வீரர்கள் நிகழ்வில் தோழர் அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரை” என வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் உள்வாங்கப்படவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பல கட்சி முறையை ஒழிப்பதே ஜனாதிபதியின் நோக்கமா எனவும் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |