பெண்களின் உரிமைகளை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்- ஐக்கிய தேசியக் கட்சி!
sri lanka
UNP
people
economy
safety
By Thavathevan
பெண்களின் உரிமைகளை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச மகளிர் தினமான இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் பிரிவு வீதியில் இறங்கி போராட்டம் நடாத்த திட்டமிட்டுள்ளதாக லக் வனிதா அமைப்பின் பொறுப்பாளர் சாந்தினி கொஹங்காகே தெரிவித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் பிரதான போராட்டமும், நாடு தழுவிய ரீதியில் நகரங்களில் மேலும் பல போராட்டங்களும் நடைபெறவுள்ளது.
நாட்டில் சிரமங்களை எதிர்நோக்கும் அனைத்து பெண்களும் கட்சி பேதமின்றி இன்றைய போராட்டத்தில் கலந்துகொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெண்களின் உரிமைகளையும், பொருளாதாரத்தையும் பாதுகாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடப்படவுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி