மலையக பொருளாதார அபிவிருத்தி : அநுரவின் அடுத்தக்கட்ட நகர்வு
மலையகத்தை பொறுத்தவரை பொருளாதராத்தில் அபிவிருத்தியை மேற்கொண்டால் மத்திரமே மலையகத்தில் அனைத்து விதத்திலும் வளர்ச்சியை காணலாமென தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் ஆறுமுகம் ஜெயராஜன் (Arumugam Jayarajan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ இலங்கையில் அதிகளவு போசனை குறைப்பாடு உள்ள பிள்ளைகள் மலையகத்திலேயே காணப்படுகின்றனர்.
அத்தோடு கல்வியை தொடர்வதற்கான சரியான கட்டமைப்பு மலையகத்தில் காணப்படவில்லை.
எனவே,கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்பாட்டைய செய்வதற்கு பொருளாதார ஸ்திரதன்மையை நாம் மேம்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மலையக அரசியலில் தேசிய மக்கள் சக்தியின் தாக்கம், மலையக வளர்ச்சி மற்றும் பொருளாதார மாற்றம் என்பவை தொடர்பில் அவர் விரிவாக தெரிவிக்கையில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |