அடிப்படை வசதியற்று எதிர்காலத்தை தேடும் இளம் குடும்பம்
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த 123 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட மன்னார் வேப்பங்குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
கணவனை இழந்த நிலையில் இரு பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றின் இன்றைய நிலையை சுமந்து வருகிறது இன்றைய உறவுப்பாலம்,
ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் - (பாகம் - 124)
இந்தக் குடும்பத்திற்கு உதவி செய்ய விரும்பினால் கீழுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
WhatsApp / Viber - +94767776363 / +94212030600

