யுத்தத் தழும்புகளுடன் வாழும் முன்னாள் போராளி
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த 129 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு - வாகரை, வாழைச்சேனை பகுதியில் உள்ள முன்னாள் போராளி குடும்பமொன்றின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
யுத்தத் தழும்புகளுடன் இந்த முன்னாள் போராளி மூன்று பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார்.
இவர்களின் வலி நிறைந்த கதைகளை சுமந்து வருகிறது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி,