எங்கு போனாலும் பிரச்சினை! முன்னாள் போராளியின் இன்றைய நிலை
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது உறவுப்பாலம் நிகழ்ச்சி.
கடந்த 153 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் பகுதியில் உள்ள மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்த ஒரு முன்னாள் போராளியின் தற்போதைய நிலையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
எங்கு போனாலும் பிரச்சினைகளுடன் இந்தக் குடும்பம் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறது.
இவர்களின் வலி நிறைந்த கதைகளை சுமந்து வருகிறது இன்றைய உறவுப்பாலம் நிகழ்ச்சி,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600