யுத்தத்தின் பின் வாழ்க்கையோடு போராடும் பெண் போராளி! மாற வடுக்களும் வலிகளும்
வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.
அவற்றிலும் வறுமையுடன் மாற வடுக்கள் தரும் வலிகளையும் சுமத்தல் எந்த அளவுக்கு கொடுமையானது என்பது யாவரும் அறிந்ததே.
அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசாங்கம், அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல. ஊடகங்களுக்கும், ஒட்டு மொத்த சமூகத்திற்குமே உண்டு.
வறுமையில் வாழும் குடும்பங்களின் துன்பங்களும், துயரங்களும் குறித்து சொல்லப்படாதவை ஏராளம்.
ஆனால், அவை இன்னமும் திரைக்குப் பின்னால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை வெளிக்கொண்டு வந்து சமூகத்தில் அவர்களின் துயரங்களை நீக்கும் ஒரு படியாக ஐபிசி தமிழ் உறவுப்பாலம் எனும் நிகழ்ச்சியின் ஊடக அவர்களிடம் சென்றது.
பட்டு வந்த துயரங்களை சொல்ல முடியாமலும் அவற்றில் இருந்து வெளிவர முடியாமலும் தவித்துக்கொண்டிருக்கும் எம்மவர்களின் கதை கேட்டு அவர்களின் துயரில் இருந்து ஒரு படி வெளிவர ஐபிசி தமிழின் உறவுப்பாலம் கைகொடுத்து வருகின்றது.
அந்த வகையில் முல்லைத்தீவு சிலாவத்தையில் கணவன் இல்லாது பிள்ளைகளோடு தனியே தவிக்கும் முன்னாள் போராளியான தாயின் துயரம் அறிந்து அவர்களது தேவைகளை வெளிக்கொணர்கிறது ஐ.பி.சி தமிழின் 'உறவுப்பாலம்' நிகழ்ச்சி
உறவுப்பாலம் - பாகம் 102
