இன்று முதல் சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு
புதிய இணைப்பு
சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.
இதன்படி, நாட்டரிசி நெல் 1 கிலோகிராம் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 1 கிலோகிராம் 125 ரூபாவிற்கும், கீரிசம்பா நெல் 1 கிலோகிராம் 132 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நெல்லை கொள்வனவு செய்ய நாளை முதல் (03) நெல் சந்தைப்படுத்தல் சபை தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, நாளைய தினம் முதல் புதிய விலைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்யும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 1 கிலோகிராம் நாடு நெல் வகை - ரூபாய் 120 ஆகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
சந்தையில் உர விலைகள்
1 கிலோகிராம் சம்பா - ரூபாய் 125 ஆகவும் 1 கிலோகிராம் கீரி சம்பா - ரூபாய் 132ஆகவும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
இதேவேளை, மண்எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் தற்போது உரங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் உர விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே தெரிவித்துள்ளார்.
ஒரு மெட்ரிக் தொன் யூரியா முன்பு சுமார் 425 அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், தற்போது அது 450 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
