தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அவசர கோரிக்கை
2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் இதுவரை பெயர்கள் சேர்க்கப்படாதவர்கள் மற்றும் பதிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய, சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாகத் தத்தமது கிராம உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பில், 2026 வாக்காளர் பதிவேட்டில் இதுவரை பெயர் சேர்க்கப்படாத தகுதியுடைய நபர்கள், தற்போதைய பதிவுகளில் முகவரி, பெயர் அல்லது தேசிய அடையாள அட்டை விபரங்களில் மாற்றங்கள் உள்ளவர்கள், 2009 பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்த, புதிய வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியுடையவர்கள் ஆகியோர் தத்தமது விபரங்களைச் சரிபார்ப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் தகுதியுடையவர்களாவர்.
உத்தியோகபூர்வ இணையத்தளம்
எதிர்வரும் உத்தியோகபூர்வ வாக்காளர் பதிவு நடைமுறைகளுக்கு முன்னதாக, தகுதியுடைய அனைத்துக் குடிமக்களும் தங்களது வாக்காளர் விபரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வழிகாட்டல்களைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (ec.lk/vrd) பெற்றுக்கொள்ள முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |