திசைமாறும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்...! அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு
மறு அறிவித்தல் வரும் வரை ஈராக் செல்ல வேண்டாம் என அமெரிக்கா தனது குடிமக்களுக்கு அறிவித்துள்ளது.
ஈராக்கில் வைத்து அமெரிக்க இராணுவம் மற்றும் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பின் அமெரிக்கா தனது குடிமக்களை ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
உள்நாட்டு அமைதியின்மை
பயங்கரவாதம், கடத்தல், ஆயுத மோதல் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை போன்ற காரணங்களால் ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தனது அறிவிப்பினை வழங்கியுள்ளது.
ஈராக்கில் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதனாலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு மேலும் தெரிவித்துள்ளது.