இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு விஜயம்
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இன்று பெருந்தோட்டப் பகுதிக்கான விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயம் குறித்து அவர் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
200 ஆண்டுகால பின்னணி
தமது விஜயம் தொடர்பில் தூதுவர் குறிப்பிடுகையில், "மலைநாட்டு குடும்பங்களைச் சந்தித்தேன்.
அவர்களில் பலர் 200 ஆண்டுகால பின்னணியை கொண்டுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் தடைகள் பற்றியும் கேட்டறிந்ததாக அவர் தெரிவித்தார்."
மேலும் குறித்த மகளுக்கான சிறந்த வீடுகள், அந்த சமூகத்தின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி நேரடியாகக் கேட்டறிந்து கொண்டதாகவும் தூதுவர் ஜூலி தெரிவித்துள்ளார்.
This morning, I met with Hill Country families (many of whom have ties to the region going back 200 years) to hear directly about the economic and political obstacles they face and their aspirations for better housing, education, and opportunities to improve their livelihood. pic.twitter.com/FPoD0CK0oT
— Ambassador Julie Chung (@USAmbSL) June 5, 2023
