இலங்கையில் வெடித்த புரட்சி! அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்
United States of America
SL Protest
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Vanan
இந்த நேரத்தில் அமைதியாக இருக்க வேண்டும்
இந்த நேரத்தில் அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் கூறியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இது குறித்த பகிர்வை இட்டுள்ளார்.
"நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு அனைத்து தரப்பினரையும் தாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனவும்,
நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் தீர்வுகளை விரைவாக செயற்படுத்த வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.
வன்முறைகளை அமெரிக்கா கண்டிக்கிறது
இலங்கையில் பதிவாகும் அனைத்து வன்முறைகளையும் அமெரிக்கா கண்டிக்கிறது எனவும் சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

